வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என்று நம்புவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் ஆதரவுடன் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க வசதியாக தேவையான சட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும்.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply