ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதற்காக பல விளம்பரத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

இலங்கையில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகளவானர்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களாகவே உள்ளனர்.

Scandinavia, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடந்த காலங்களில் பல விளம்பரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply