இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை மெய்வல்லுநர் இன்று நாடு திரும்பினர்.

அவர்களை விமான நிலையத்தில் வைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட அமைச்சு அதிகாரிகள் வரவேற்றனர்.

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே அதிசிறந்த மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்தார்.

அத்துடன் பாத்திமா ஷபியா யாமிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் ஆகிய 3 போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Share.
Leave A Reply