தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்
அரசாங்க மருத்துவர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
திடீர் மற்றும் நியாயமற்ற இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை முதல் நாடு முழுவதும் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிததுள்ளது.
நியாயமற்ற இடமாற்ற உத்தரவுகள் இன்றைய தினம் (அக்டோபர் 30) நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிலையங்களில் சேவை தடைபாடுகளுக்கான முழுப் பொறுப்பையும் அதிகாரிகள் ஏற்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது.
- இந்த தகவலை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் டாக்டர் பிரபத் சுகததாசா நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

