கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.
நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிலையான கடல்சார் வளர்ச்சி மூலம் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும் இந்த இணக்கம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

