” “உலக அழகி பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருந்த வந்த பிரியங்கா கடந்த 2018 இல் தன்னை விட 10 வயது இளையவரான பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவர்களுக்கு 2022 இல் பெண் குழந்தை பிறந்தது. தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினியான கமிட் ஆகி உள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ஒன்று வைரலாகி வருகின்றன. அதில் தனது கழுத்தில் பாம்புடன் பிரியங்கா காட்சி அளிக்கிறார்.

அருகில் பயந்த பாவனையுடன் நிக் ஜோனாஸ் நிற்கிறார். மேலும் முந்தைய காலங்களில் பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இதனுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பலரும் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply