•“இவன்தான் எப்பவும் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ரூம்ல தூங்கிக்கிட்டே இருக்கான். என்னைப் போய் சொல்றான். இந்த ஷோ வைரல் ஆகறதே என்னாலதான். ஒரு முறையாவது நாமினேஷன் போய் வரட்டும். அப்ப தெரியும்” என்று எஃப்ஜேவை திவாகர் வறுத்தெடுக்க

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார்.

இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி.

பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட சாப்பிட கிடைக்கல. ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த சூப்பர் வீடு. இன்னிக்கு ஒரு பிஸ்கெட்டுக்குகூட வழியில்லை” என்று சூப்பர் வீடு புலம்பிக் கொண்டிருந்தது.

“என்னோட ஸ்மைலுக்கு நிறைய பொண்ணுங்க அடிமை. இப்ப அதை செஞ்சு காட்டப் போறேன்” என்று காலையிலேயே ரீல்ஸ் இம்சையை ஆரம்பித்தார் திவாகர். ‘டேய்.. யாராவது அவனை தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலற ஆரம்பித்தது. பின்னணியில் கம்ருதீனும் அரோராவும் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 25 | 30/10/2025

Share.
Leave A Reply