லாக்கர் டாஸ்க். ‘இதுதான் கடைசி. இனி டாஸ்க் கிடையாது. ரெண்டு வீடும் உள்ளே போகலாம்’ என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு நின்றார்கள்.

“நீங்க வெளிய வேணா நல்லவங்களா இருந்துக்கங்க. ஆனா வீட்டுக்குள்ள இருக்கணும்னா போட்டி மனப்பான்மையோட ஆட்டத்தை ஆடணும். டிப்ளமஸி தேவையில்லை. புரிஞ்சுதா. இது என் ரிக்வெஸ்ட் இல்ல. டிமாண்ட்” என்று சர்வைவல் ஆஃப் தி ஃபி்ட்டஸ்ட் பாடத்தைப் போட்டியாளர்களுக்கு நடத்தினார் பிக் பாஸ்.

‘யார்ரா அந்தப் பையன்?’ டாஸ்க்கில் தன்னைப் பற்றி விக்ரம் சொன்னதால் அவரிடம் வம்பிழுத்த திவாகர் “க்ருப்புல இல்லைன்னா நாமினேட் ஆகிடுவோம்ன்னு பயமா?” என்று ஈகோவைத் தூண்டி விட, எப்போதும் பொறுமையாக இருக்கும் விக்ரம் கோபமடைந்து, “பயம்ன்னுலாம் சொல்லாத. நாமினேஷன் பாஸ் வேணும்ன்னு நான் கேட்டேனா.. எது வேணா சொல்லு. பயம்ன்னு சொல்லாத” என்று எச்சரிக்க, “ரெண்டு பேரும் நிப்போம்.

மக்கள் யாருக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு பார்ப்போம்” என்று எதிர் சவால் விட்டார் திவாகர். (மனுஷனுக்கு என்னவொரு கான்பிடன்ஸ்?!)

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 26

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 25 | 31/10/2025

Share.
Leave A Reply