துப்பாக்கி கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : மீள் பரிசீலனை செய்ய வலியுறுத்தும் சிறீதரன் எம்.பிபொலிஸ் பாதுகாப்பு அல்லது துப்பாக்கி கேட்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட உரிமை. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்பாளர்களுடன் சமகால அரசியல் நிலமைகள் மற்றும் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

