தங்களுக்குள்ளேயே சுடுபட்ட சிறிலங்கா எம்.பிக்கள் : அரசாங்கத்தை எச்சரிக்கும் சிறீதரன்

பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கியினால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட வரலாறுகள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வைத்திருப்பது என்பது ஆபத்தானது. உறுப்பினர்கள் கேட்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நேற்று (02) நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply