இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஏற்படும் கவனச் சிதறல்கள் வீரர்களின் ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை பாதிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் தங்களது முழு கவனத்தையும் பயிற்சிக்கும், ஆட்டத்திற்கும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்

