“ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்தது.
‘அன்மோல்’ என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் இருந்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், ‘இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன்.
இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது’ என்று பெருமையாக தெரிவித்தார்.இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு இது எடுத்துக்காட்டு என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “,

