இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன.

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 344,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 315,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply