அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 71 சதமாகவும், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாணயங்களின் பெறுமதி

இதேவேளை இன்றைய தினம் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 405 ரூபாய் 83 சதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி 356 ரூபாய் 16 சதம் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share.
Leave A Reply