• உடுவில் மல்வம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

• யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில்  கடன்தொல்லையால் வயோதிபர் உயிர்மாய்ப்பு

சுன்னாகம் – சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த வன்முறை குழு அட்டகாசம் புரிந்துள்ள தால் பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டிற்குள் அத் துமீறி உள்நுழைந்த வன் முறைக்குழு அங்கு நிறுத் தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளது.

இதனால் முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர், அந்த வன்முறைக்குழு அங்ருந்து தப்பிச் சென்றுள்ளது. இதன் பின் வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது..

இச்சம்பவம் குறித்து சுன்னகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

உடுவில் மல்வம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதி காலை இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட் டவர் மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த தவராசா  ஜெயசுதன் (வயது 45) என்ற இளம் குடும்பஸ்தர் ஆவார்.

மனைவி வீட்டில் உள்ள கிணற்றங் கட்டில் இரவு இருந்தவர் கிணற்றுக்குள் சடலமாக மீட்கப்பட்டார். இம் மரணம் தொடர்பில்  யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறு முகம் ஜெயபாலசிங்கம் விசா ரணைகளை மேற்கொண் டார் சாட்சிகளை சுன்னாகம்
பொலிஸார் நெறிப்படுத்தினர்.

கடன்தொல்லையால் வயோதிபர் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கடன் தொல் லையால் வயோதிபர் ஒரு வர் நேற்று முன்தினம் திங் கட்கிழமை இரவு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் இரத்தினச பாபதி (வயது 72) என்ப வராவார்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத் தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிசார் நெறிப்படுத்தினர்.

Share.
Leave A Reply