வறண்டு போய்க் கொண்டிருந்த இந்த சீசனில் ‘ஹோட்டல் டாஸ்க்’ கொஞ்சம் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அதிலும் பாரு கலாய்க்கப்படும் போதெல்லாம் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே’ மோமெண்ட்.

இந்த எபிசோடில் ஹோட்டல் டாஸ்க். ‘ஆஹா.. ஓஹோ’ என்றொரு ஹோட்டல் முன்பொரு காலத்தில் புகழோடு இருந்ததாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து இப்போது வியாபாரம் ஈயோட்டும் நிலைமைக்கு ஆகி விட்டதாகவும் விவரித்தார் பிக் பாஸ்.

இது ஹோட்டலுக்கு மட்டுமல்ல, பிக் பாஸ் தமிழ் சீசனுக்கே பொருந்தும். கழுதை தேய்ந்து கம்பளிப்பூச்சியான கதையை சுயவாக்குமூலமாக சொன்னது பிக் பாஸின் நோ்மை.

‘அவனை யாராவது தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்கிற மாதிரி தன் வழக்கமான அலப்பறையை செய்து கொண்டிருந்தார் திவாகர். “அதாவது அக்கா.. நான் வாட்டர் மெலன் ஸ்டார். ஹீரோ மெட்டீரியல். இதெல்லாம் மக்களா எனக்கு கொடுத்த பட்டம்” என்று சாண்ட்ராவிடம் அவர் அளந்து விட்டுக் கொண்டிருக்க “ரொம்ப கிரிஞ்சா இருக்கு” என்று சாண்ட்ரா சொன்னவுடன் நடிப்பு அரக்கனுக்கு கோபம் வந்து விட்டது. எனவே இருவருக்கும் வாக்குவாதம்.

“என்னை ஏன் bad character-ன்னு சொன்னீங்க?” என்று சாண்ட்ரா, திவாகரிடம் கேட்க ஆரம்பித்ததுதான் இந்த வினை. “நீங்க ஏன் என்னை கிண்டல் பண்ணீங்க?” என்று திவாகர் கேட்க “அதுக்கு bad character-ன்னா சொல்லுவாங்க.. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” என்று சாண்ட்ரா கேட்க சீரியஸ் காமெடியாக இருந்தது.

இதை தூரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரஜின், மனைவிக்கு சப்போர்ட்டாக போகலாமா, போனால் தவறாகி விடுமா என்றெல்லாம் நினைத்துக் கொண்டே உலவிக் கொண்டிருந்தார் போல.

ஒரு கட்டத்தில் மனம் பொறுக்காமல் அவரும் உள்ளே புகுந்து ‘bad character-ன்னு சொல்லலாமா?” என்று களம் இறங்கி விட்டார். “பொம்பளை முன்னாடி கைய நீட்டி பேசாதீ்ங்க” என்று சண்டை வலுக்க ‘தல’ திவ்யா இங்கேயும் வர வேண்டியிருந்தது. (பாருவை சமாளிக்கவே நேரம் போதல. இவங்க வேற!).

கிளைமாக்ஸ் இல்லாத அடிதடி Prank

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 30

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 30 | 04/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 29

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 29 | 03/11/2025

Share.
Leave A Reply