தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்பிக்கு வந்த கனவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தனது கனவில் புத்த துறவி ஒருவர் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க, தனியார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சஜித்திடம் அறிவுரை
தனியார் வைத்தியசாலை ஒன்றில் இதய சத்திரசிகிச்சை ஒன்றின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் அறுவை சிகிச்சை தொடர்பில் வைத்தியர்களுக்கு நன்றி தெரிவித்து முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதன்படி, இதயத்துக்கு இரத்தத்தை வழங்கும் 3 இரத்த நாளங்களில் ஒன்று அடைபட்டதுடன் இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதைப் பாதிக்கும் பெருநாடி வால்வும் அடைபட்ட காரணத்தினால் அவர் இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அவரின் அறுவை சிகிச்சையின் போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அறிவுரை கேட்டதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க, குறிப்பிட்டுள்ளார்.
Previous Articleதங்கத்தின் விலை மீண்டும் பாய்ந்தது – உலக சந்தையில் புதிய உச்சம்!
Related Posts
Add A Comment

