ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி முடிவு என்பன தொடர்பாக நாளைய தினத்திற்கு முன் கல்வி தொழிற்சங்கங்களுக்கு தகவல் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசின் தீர்மானத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற கல்வி தொழிற்சங்க மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேர நீட்டிப்பு குறித்து ஆசிரியர்களுடன் ஆலோசனை நடைபெற்றதாக கல்வி அமைச்சர் கூறினாலும், எந்த ஆசிரியரும் அத்தகைய கலந்துரையாடல்களில் பங்கேற்கவில்லை என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களில் இரண்டு இடைவேளை நேரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்கங்களின் எதிர்ப்புக்குப் பிறகு அதில் ஒன்றை நீக்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நேர நீட்டிப்பு தொடர்பாக அரசு எவ்வாறு முடிவு செய்துள்ளது என்பது இதுவரை தெளிவாக இல்லை என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைக்கு தடை ஏற்படுத்தாத வகையில் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

