பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

அவ்வாறு பணத்தை மோசடி செய்து வரும் குழுவை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

பாரிய மோசடி

இந்த சந்தேக நபர்களால் பல பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.அதனை நம்பிய மக்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் அசங்கா போதரகமவிடம் தெரிவித்தனர்.

கரந்தெனய பகுதியைச் சேர்ந்த ஒருவர், புற்றுநோய் நோயாளியான தனது மகளின் புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடியாக பணம் சேகரித்துள்ளார்.

Share.
Leave A Reply