2026 நிதியாண்டுக்கான பாதீட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார்.

அதன்படி, ஜனவரி 01, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரையிலான மொத்த அரசாங்கச் செலவினம் 4,434 ரூபா பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணவீக்கத்தை 5 வீதத்துக்கும் குறைவாக வைத்திருப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாக ஜனாதிபதி தனது பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

அத்துடன், அந்நியச் செலாவணி நிலைகள் நிலையானதாகவும், ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் இரண்டும் வலுவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

முதலாம் இணைப்பு 

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன்படி, சற்று முன்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

மேலும், அவர் தற்போது தனது உரையை நிகழ்த்தி வருகின்றார்

Share.
Leave A Reply