இந்தோனேஷியாவில் மசூதி ஒன்று பாரிய குண்டு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் சிக்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 54 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், வடக்கு ஜகார்தாவின் கெலாபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது.

பள்ளி மாணவர்கள்

இந்த பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில், நேற்று (07) தொழுகைக்காக பள்ளி மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கூடியுள்ளனர்.

இதன்போது, மசூதியில் குண்டு வெடித்ததில் 54 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகள்

இந்தநிலையில், சம்பவ இடத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல், வெடி தயாரிக்க பயன்படும் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply