உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களைச் செய்வது உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
எடையைக் குறைக்கும் உணவுகள்
காலிஃபிளவர்: காலிஃபிளவர் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாகும். இதில் கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே அரிசிக்கு ஒரு சிறந்த மாற்றாகும். 100 கிராம் காலிஃபிளவர்கள் சுமார் 25 கிராம் கலோரி உள்ளது.
ஆப்பிள்கள்: ஆப்பிள் பழம் நார்ச்சத்து நிறைந்தது, இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 100 கிராம் ஆப்பிள் பழத்தில் சுமார் 52 கிராம் கலோரி உள்ளது.எனவே இது பசியை கட்டுப்படுத்தி நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு: வேகவைத்த அல்லது சுடப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் சுமார் 77 கிராம் கலோரி உள்ளது. மேலும் இது இது செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
நட்ஸ் வகைகள்: பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, பிரேசில் நட்ஸ், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. நட்ஸ் வகைகள் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்தவை. 100 கிராம் நட்ஸ்களில் சுமார் 550-600 கிராம் கலோரி உள்ளது. எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை இவை வழங்குகின்றன.
டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் பால் சாக்லேட்டை விட சர்க்கரை குறைவாகவும், கோகோ சதவீதம் அதிகமாகவும் இருக்கும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக சாப்பிடலாம். 100 கிராம் டார்க் சாக்லேட்டில் சுமார் 546 கிராம் கலோரி உள்ளது.
தர்பூசணி: தர்பூசணியை உடல் எடை குறைப்பிற்கு, சீரான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது நல்லது. 100 கிராம் தர்பூசணி பழத்தில் சுமார் 30 கிராம் கலோரி உள்ளது.
பப்பாளி: பப்பாளி குறைந்த கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதால், உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, வீக்கத்தைக் குறைக்கிறது.100 கிராம் பப்பாளியில் 43 கிராம் கலோரி உள்ளது.
தேங்காய் நீர்: தேங்காய் நீர் கொழுப்பை எரிப்பதற்கும், மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கும் உதவும். இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதில் எலக்ட்ரோலைட்டுகள், குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் பசியின்றி இருக்க உதவுகிறது, மேலும் நீரேற்றமாகவும் ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது. 100 கிராம் தேங்காய் நீரில் சுமார் 19 கிராம் கலோரி உள்ளது.
வெண்ணெய் இல்லாத பாப்கார்ன்: வெண்ணெய் இல்லாமல் பாப்கார்ன் செய்ய ஊட்டச்சத்து ஈஸ்ட், நட்ஸ் (பாதாம், வேர்க்கடலை) அல்லது தேங்காய் வெண்ணெய் போன்றவற்றை சேர்க்கலாம். வெண்ணெய்க்குப் பதிலாக நெய் மற்றும் உப்பைச் சேர்த்து சுவையூட்டலாம். இதில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. 100 கிராமில் வெண்ணெய் இல்லாத பாப்கார்னில் சுமார் 380 கிராம் கலோரி உள்ளது.

