75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையை வலுப்படுத்தவும், அதன் கண்ணியத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்.

இதுபோன்ற நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை பொருத்தமான தேர்வுகள் மூலம் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Share.
Leave A Reply