இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தப்பிக்க முடியாது!

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கயாடு லோஹர் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் உருவகேலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” நாம் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், நாம் மற்றவர்கள் மீது கருணை உடன் இருக்க கற்று கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்தால் தனித்துவம் என்பது இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply