வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

அருகம் குடா பகுதியில், கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி, வெளிநாட்டுப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொத்துவில் பொலிஸ் நிலையம் – 063 2248022
பொதுவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 071 8591168

Share.
Leave A Reply