இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அச்சிடும் அட்டைகள் இல்லாததால் நிறுதி வைக்கப்பட்டிருந்த செயற்பாடு, மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தினமும் சுமார் 6,000 ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் இல்லாததால், கடந்த காலங்களில் கிட்டத்தட்ட 350,000 ஓட்டுநர் உரிமங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சிடும் பணி

அந்த அச்சிடும் அட்டைகளை வழங்குவதன் மூலம், தொடர்புடைய ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் குவிந்து கிடக்கும் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்து 14 நாட்களுக்குள் ஓட்டுநர் உரிமத்தை வழங்கவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply