தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ், வேன், கார் என மூன்று வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்து குறித்து தனமல்வில பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

