இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட தனது கணவனுக்கு இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு அமைச்சும் நீதியை பெற்றுத் தர வேண்டும் என உயிரிழந்தவரின் மனைவியான சருக்கலி தினேஷா லக்மாலி கோரிக்கை விடுத்துள்ளார்.

படபோலாவின் கொண்டகலாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரிந்து ஷனகா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிகரெட், மதுபான பாவனையை விரும்பாத என் கணவன் விருந்தொன்றின் போது கொலை செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இலங்கையர்

“என் கணவர் ஒரு தச்சர். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் 7ஆம் வகுப்பு படிக்கிறார். இளைய மகள் பாலர் பாடசலையில் படித்து வருகிறார்.

அவருக்கு தினமும் வேலை இல்லாததால், வீடு கட்டவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் வெளிநாடு சென்றார். கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி இஸ்ரேலுக்கு சென்றார்.

வெளிநாடு செல்வதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 7 வீத வட்டியில் 5 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார்.

இந்த மாதம் 12 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தார். அந்தப் பணத்தில் அவர் எனக்கு 100,000 ரூபாய் அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் வேலை செய்யும் போது, ​​கடனை அடைக்க எங்களுக்கு பணம் அனுப்புவதாகக் கூறினார்.

கணவன் கொலை

இவ்வாறான நிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடன்களை எப்படி நான் அடைப்பேன். பிள்ளைகளை எப்படி பார்த்துக் கொள்வேன்.

என் கணவரின் உடலை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் பணியாற்றிய வேளையில் ஆபிரிகர் ஒருவரினால் இலங்கையரான தரிந்து ஷனகா கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply