நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அறு (6) வான்கதவுகளும் 18 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளன.
தெதுரு ஓயாவில் ஒவ்வொரு கதவிலும் ஒரு அடி அளவிற்கு திறக்கப்பட்டதால் ஒரு வினாடிக்கு 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகின்றது. பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 9,000 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதாக பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நீர்வெளியேற்றத்தால் கீழ்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் நீர்மட்டம் உயரக்கூடிய அபாயம் உள்ளதால், மகாவலி நதியை பயன்படுத்தும் மக்கள் உயர் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர்.

