அம்பாறை நிந்தவூர் புறநகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் முதலில் 302 கிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவர் பிடிபட்டார்.
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வீட்டு பின்னால் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் பெற்றோரின் தகவலின் அடிப்படையில் வலையமைப்பின் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட மகனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அருகிலுள்ள காலி காணியில் மறைத்து வைக்கப்பட்ட 5.7 கிலோ கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மொத்தம் 7.5 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூவருமே தற்போது விளக்கமறியல் மற்றும் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

