தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் வெற்றிகரமான அறிமுகம் பெற்றார்.

நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் தொழில்திபராகவும் வலம் வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு தற்போது ரூ.180 கோடிக்கு மேல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அவரிடம் BMW 5 Series, Mercedes GLS 350d, Ford Endeavour, BMW 7 Series போன்ற பல சொகுசு கார்கள் உள்ளன. மேலும், ஹைதராபாத் மற்றும் சென்னை நகரில் ரூ.100 கோடி மதிப்பிலான பங்களாக்கள், கேரளாவில் தனிப்பட்ட வீடுகள் என இந்தியா முழுவதும் பல ஆடம்பர சொத்துகள் அவரிடம் உள்ளது.

நயன்தாராவின் லைஃப்ஸ்டைல், சம்பளம், வியாபாரங்கள் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.

Share.
Leave A Reply