வெலிமடை, போரலந்த மற்றும் கந்தேபுஹுல்ப்பொல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை காரணமாக, நேற்று (17) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியர்களில், மனைவி சடலமாக மீட்கப்பட்டார். 32 வயதான இந்த பெண்ணை தேடும் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.
இதேவேளை, 37 வயதுடைய கணவன் இன்னும் காணாமல் போயிருப்பதால், அவரைத் தேடும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்பகுதி மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

