இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் நிபுணருமான குமார் சங்ககாரா, மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் அணியுடன் இணைந்த அவர், சஞ்சு சாம்சன் வழிநடத்தும் அணியை கடந்த நான்கு சீசன்களில் இருமுறை பிளேஆஃப் சுற்றுக்கு வழிநடத்தியுள்ளார்.
2024 உலகக்கோப்பையில் இந்தியாவை சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுச் சென்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தானின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அண்மையில் பதவி விலகவெடுத்ததை அடுத்து, 2026 ஐபிஎல் தொடருக்காக சங்ககாரா மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அறிவிப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மிக பிரமாண்டமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் வரும் பிரபல காட்சியை ஏஐ மூலம் சங்ககாரா நடந்து வரும் காட்சியாக மாற்றிய சிறப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

