தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவித்ததன்படி, 350 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த விலை குறைப்பு குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல முக்கிய சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை உள்ளடக்கியது.

அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் புதிய வர்த்தமானி அறிவிப்பின் அடிப்படையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸாவால் வெளியிடப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதன் மூலம், நோயாளிகள் மீது இருந்த மருந்துச் செலவு சுமை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply