‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ்.

அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும் சரியில்லை என்று நாம் புலம்ப வேண்டியிருக்கிறது.

‘பினாயில் ஊத்தி வீட்டை கழுவணும்’ என்று பில்டப் கொடுத்த சாண்ட்ரா, குடும்பத்துடன் சௌக்கியமாக வாழ்கிறார். ‘சொல்ல மாட்டேன், செய்வேன்’ என்று பன்ச் டயலாக் பேசிய அமித், எதையும் சொல்லாமலும் செய்யாமலும் அமைதியான வாழ்க்கைய கழித்து வருகிறார்.

அன்பு கேங்கிற்கு எதிராக வம்பு கேங் ஒன்று உருவாகியிருக்கிறது. பாருவை கடுமையாக வெறுத்தபடி உள்ளே வந்த பிரஜின், சாண்ட்ரா எல்லாம் இப்போது அவருடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாலிசி. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல க்ரூப்பிஸத்தை இன்னொரு க்ருப்பிஸத்தால்தான் உடைக்க முடியும் என்பது இவர்களின் தத்துவம் போல.

“சபரியை முதல்ல குத்தணும்” என்று சாண்ட்ரா ஆவேசமாக சொல்ல “ஆமாம். அழுது சீன் போடறான்” என்று ஒத்து ஊதினார் பாரு. இவர்களின் குத்துப்பட்டியலில் விக்ரம், கெமி, கனி என்று பெரிய வரிசையே இருக்கிறது. நள்ளிரவு தாண்டியும் இவர்களின் சதியாலோசனை ஓயவில்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 43

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 43|17/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 42

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 42|16/11/2025

Share.
Leave A Reply