கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரையும் மேலும் நான்கு பேரையும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவந்துள்ளதாகவும் இதன்காரணமாக அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடி பிடிக்க விசேட குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
இதேவேளை, இந்தோனேசியாவில் கைதான குற்றக் குழுவிடம் இருந்து 07 T56 ரக துப்பாக்கிகள், T81 ரக துப்பாக்கி, பல கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள் மற்றும் மொத்தம் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விசாரணை நாட்டின் அடிக்கடி தலைதூக்கும் பாதாள உலக தொடர்புகளின் பின்னணியில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

