சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மறைமுக விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் நேற்று (17) மாலை திடீர் சோதனைக்குட்படுத்தினர்.
பொலிஸாருக்கு முன்வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், குறித்த விடுதியை நடத்தி வந்த 29 வயதான தலகொலவேவ பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் அடங்குகிறார்.
மேலும், 20 முதல் 34 வயதுக்குட்பட்ட உடுகமை, அம்பாறை, வரக்காகொட மற்றும் மகுல்வேவ பகுதிகளைச் சேர்ந்த நான்கு பெண் சந்தேகநபர்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

