இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிற்குப் பின் பல தொழில்களை ஆரம்பித்து வருவது அறிந்ததே. அவரைப் போலவே, குடும்பத்தினரும் புதிய முதலீடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மும்பையில் உள்ள Peninsula Heights அப்பார்ட்மெண்டில் ரூ. 32 லட்சம் மதிப்பிலான புதிய பிளாட் ஒன்றை வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் குடும்பம் ஏற்கனவே மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் 6000 சதுர அடி பரப்பளவில் நிற்கும் 5 மாடி ஆடம்பர இல்லம் வைத்திருக்கிறது. இதனுடன் சேர்த்து இந்த புதிய முதலீடும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சச்சின் மகள் சாரா டெண்டுல்கரும் பல தொழில்களை ஆரம்பித்து வருவதால், டெண்டுல்கர் குடும்பத்தின் வணிக விரிவாக்கம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைக் குவித்துள்ளது.

Share.
Leave A Reply