உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கியமான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

தாக்குதல் விசாரணை அறிக்கைகளில் கூட சில முக்கிய பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இது போன்ற ஆதார அழிப்புகள் இருந்தபோதும், அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது, மேலும் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை எந்த சூழ்நிலையிலும் வெளிக்கொணரும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதேபோல், CID முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர, மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இந்த விசாரணையில் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூழ்நிலைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என அரசு உறுதியளித்துள்ளது.

Share.
Leave A Reply