அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறெரிந்த பாரு
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை வரவைக்க முடியுமா என்று பார்க்கிறார் பிக் பாஸ். ஆனால் விக்ரம் அணியைத் தவிர மற்ற அணிகள் சொதப்புகிறார்கள்.
அதிலும் கிச்சன் டீம் படு மோசம். வன்மத்தை வெளிப்படுத்துவதில் பாருவிற்கு நிகராக மாறிக் கொண்டிருக்கிறார் ‘சாம்பார்’ சாண்ட்ரா.
‘சோறு – சோப்பு – மாப்பு – இதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க்.
சமையல், சுத்தம் என்கிற அன்றாட பணிகளையே என்டர்டெயின்மென்ட் கலந்து தர வேண்டும். சாம்பார் ஸ்குவாட்ஸ், மாப் மாயாவிஸ், ஃபிளஷ் ஃபைட்டர்ஸ் என்று ரைமிங்காக அணிகளுக்கு பெயர் தந்திருந்தார்கள். என்ன ரைமிங் இருந்து என்ன புண்ணியம்?
மூன்று அணிகளாக பிரிந்து ஆடும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ரிவார்டுகள், பாயிண்ட்டுகள் கிடைக்கும். வெற்றி பெறும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் அடுத்த வார ‘தல’ போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 44
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 44|18/11/2025
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 43|17/11/2025

