தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களால் பிரபலமான மூத்த நடிகை துளசி, நீண்டகால நடிப்பு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை துளசி. 1970களில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய அவர், ஆயிரக்கணக்கான படங்களில் அம்மா ரோல்களில் மரியாதையுடனும், உணர்ச்சிபூர்வமாகவும் நடித்துள்ளார்.

தமிழில் சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும், சர்க்கார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்ததும் ரசிகர்களுக்கு நன்கு நினைவிலுள்ளது.

பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக நடித்துவரும் துளசி, தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,
“இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பயணத்திற்கு பிறகு அவர் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply