இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படம் நவம்பர் 14 அன்று வெளியானது. 1950-களின் தமிழ் திரை உலகை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வெளியான முதல் நாளிலேயே ரூ.10 கோடி வசூல் செய்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
துல்கருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ, மேலும் சமுத்திரக்கனி மற்றும் ராணா டக்குபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராணாவின் Spirited Media மற்றும் துல்கரின் Wayfarer Films இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய்.
திரை உலகைச் சுற்றியுள்ள காரசாரமான சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்ட ‘காந்தா’ கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அசத்தலாக ஓடுகிறது.
5 நாட்களில் மட்டும் படத்தின் உலகளாவிய வசூல் ரூ.29 கோடியை கடந்துள்ளது.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தினந்தோறும் வசூலில் உயர்ந்து கொண்டிருக்கிறது.

