திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதிக்கு அருகில் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற முயன்ற நடத்துனர் பஸ்ஸில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – கந்தளாய் தனியார் பஸ் ஒன்றில் பணியாற்றும் நடத்துனர் பாலம்போட்டாறு கண்டி திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற முயன்ற போது பஸ்ஸில் இருந்து கீழே தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பஸ் நடத்துனர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply