l சென்னை: ரஜினி, கமல் இருவரும் உட்கார்ந்து, கதை பற்றின விவாதங்களை மேற்கொண்டு, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து, அதற்கு பிறகு சுந்தர் சி-யையோ, கேஎஸ் ரவிக்குமாரையோ அல்லது வேறு யாரையோ தேர்வு செய்திருக்கலாம்..
அதைவிட்டுவிட்டு, சுந்தர் சியிடமே கதை கேட்டால், அவர் என்ன செய்வார்?” என்று பத்திரிகையாளர் உமாபதி கருத்து தெரிவித்துள்ளார். கமல் – ரஜினி – சுந்தர் சி மூவரும் தலைவர் 173 படத்தில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி, டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருந்தது..
ஆனால், திடீரென சுந்தர் சி, அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.
தலைவர் 173
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், “சுந்தர் சி விலகிவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். அப்புறம் எப்படி 3 பேரும் இணைய முடியும்? என்னைப் பொறுத்தவரை நான் தயாரிப்பாளர்
இப்படத்தில். என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அதுதான் ஆரோக்கியமானது.
ரஜினிக்கு பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக்கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி,
சுந்தர் சி ஒரு நல்ல டைரக்டர்.. ஒரு கதையை தந்து அவரை படம் செய்ய சொன்னால், அதில் மசாலா ஏற்றி, கமர்ஷியல் படமாக தந்துவிடுவார் சுந்தர் சி..
ஈசிஆர் ரூமில் பேய்க்கதை
மற்றபடி சுந்தர் சி ஒரு எழுத்தாளர் கிடையாது.. ஒரு திரைக்கதையை காமெடியாக டைரக்ட் செய்யக்கூடியவர்..
ரஜினி, கமல் இருவரும் உட்கார்ந்து, கதை பற்றின விவாதங்களை மேற்கொண்டு, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து,
அதற்கு பிறகு சுந்தர் சி-யையோ, கேஎஸ் ரவிக்குமாரையோ அல்லது வேறு யாரையோ தேர்வு செய்திருக்கலாம்..
அதைவிட்டுவிட்டு, சுந்தர் சியிடமே கதை கேட்டால், அவர் என்ன செய்வார்? அப்படியிருந்தும் பேய் கதை ஒன்றை ரெடி செய்துள்ளார்.
. ஈசிஆர் ரோட்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கதை விவாதத்துக்கு சுந்தர் சி-க்கு ரூம் போடப்பட்டுள்ளது..
பிறகு கதையை முடிவு செய்த சுந்தர் சி, குஷ்புவை வரவழைத்து, 4 மணி நேரம் கதை சொல்லி உள்ளார்..
இந்த பேய்க்கதையை கேட்டு பயந்துபோன குஷ்புவின் முகம் வெளிறிப்போய்விட்டது. அந்த அளவுக்கு கதை அருமையாக இருப்பதாக சொல்லி உள்ளார்.
! ” போயஸ் கார்டனில் பேய்க் கதை
இதனால் மகிழ்ச்சியடைந்த சுந்தர் சி, தன்னுடைய பேய்க்கதையை எடுத்து கொண்டு, போயஸ் கார்டனில் ரஜினியிடம் சென்றுள்ளார்..
பேய்க்கதை என்று 5 நிமிடத்தில் தெரிந்ததுமே, பிறகு முடிவை சொல்வதாக ரஜினி சுந்தர் சியிடம் சொல்லி உள்ளார்.
உடனே கமலுக்கு போனை போட்ட ரஜினி, சுந்தர் சி பேய்க்கதை சொல்கிறார்,..நீங்கள்தான் பேய் கேரக்டர், நான் பேயை ஓட்டும் கேரக்டர் என்கிறார்,
எனக்கு இந்த கதை செட் ஆகாது என்று சொல்லி உள்ளார் ரஜினி. இதற்கு பிறகு மீண்டும் 2வது கதை சொல்லி உள்ளார் சுந்தர் சி. அதுவும் ரஜினிக்கு பிடிக்கவில்லை.
பிறகு 3வது கதையை சுந்தர் சி சொன்னதுமே, அது கமலுக்கு பிடித்துவிட்டது
. லைனுக்கே வராத ரஜினி
உடனே இந்த கதையை ரஜினியிடம் சொல்லுங்கள் என்று கமல் சொல்லவும், அதன்படியே 3வது கதையை ரஜினியிடம் சொல்லி உள்ளார் சுந்தர் சி.
ஆனால், அதுவும் ரஜினிக்கு பிடிக்காமல், லேட்டஸ்ட் டிரெண்டிங்கில் கதையை சொல்லுங்க என்றாராம்.
அதாவது சுந்தர் சி ஒரு மாத காலமாக ரெடி செய்து வைத்திருந்த கதையின் லைனுக்குள்கூட ரஜினி வரவில்லையாம்.. அதற்கு பிறகுதான் இந்த படத்திலிருந்து விலகிவிடுவது என்று சுந்தர் சி முடிவு செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

