வடமாகாணத்தின் பல இராணுவ முகாம்களில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டு வருவது குறித்து வடமாகாண அழகு சங்கங்களின் சம்மேளம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது உள்ளூர் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடத்தப்படுகின்றன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்தே வடமாகாண அழகு சங்கங்களின் சம்மேளம் ஆவேசமான அறிக்கையொன்றை வெளியிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“ஒரே ஒரு நிலையமல்ல… பல முகாம்களில் செயல்படுகிறது” – அழகு சங்கங்கள்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,
அமைச்சர் கூறியது போல் வன்னியில் ஒன்றே ஒன்று அல்ல, வடமாகாணத்தின் பல இராணுவ முகாம்களில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.
யாழ்ப்பாணம்
-
காங்கேசன்துறை – தொண்டமானாறு வீதி, இராணுவ முகாம்
வவுனியா
-
பம்பைமடு இராணுவ முகாம்
-
வவுனியா சிறைச்சாலைக்கு முன்புறம்
-
இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம்
-
பரிச்சங்குளம் இராணுவ முகாம்
கிளிநொச்சி
-
விசுவமடு – சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளை தலைமையகம்
முல்லைத்தீவு
-
முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரி அடி
-
முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகிலுள்ள இராணுவ முகாம்
-
அக்கராயன் – முருகண்டி விஷேட படையணி முகாம்
-
கோப்பாபுலவு – கொண்டமடு வீதி 59ஆம் படைப்பிரிவு (3 நிலையங்கள்)
மன்னார்
-
கள்ளியடி – இலுப்பைக்கடவை
-
திருக்கேதீச்சரம் – முள்ளிப்பள்ளம்
“உள்ளூர் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு”
அழகு சங்கங்களின் சம்மேளனம் கூறியது:
-
இராணுவத்தினர் இவ்வாறு பொதுப்பணியக சந்தையில் நுழைவது சாதாரண குடிமக்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது
-
குறிப்பாக வடமாகாணத்தில் சிகை அலங்காரம் மூலம் குடும்பத்தை நடத்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
-
போட்டி இல்லாத நிலையில் இராணுவ நிலையங்கள் பொதுமக்களை ஈர்க்க, தனியார் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளன
“இராணுவ நிலையங்களை உடனடியாக மூட வேண்டும்” – வலியுறுத்தல்
அழகு சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன:
-
இராணுவத்தினர் நடத்தும் அனைத்து சிகை அலங்கரிப்பு நிலையங்களையும் உடனடி நடவடிக்கை மூலம் மூட வேண்டும்
-
மக்கள் சேவைகளில் இராணுவம் தலையிடுதல் அரசியல், சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது
-
பாதுகாப்பு பொறுப்பை மீறி வருவாய் ஈட்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவது சட்ட மற்றும் நெறிமுறைக்கு முரணானது
அறிக்கை தற்போது வடமாகாணம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

