கால் இடறி கிணற்றில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஆனைக்கோட்டை – ஆறுகால் மடம் பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஆறுகால்மடத்தை சேர்ந்த சின்னத்துரை ராஜ்வத னன் (வயது40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் நேர்வேயில் வசித்துவந்த நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்ததா கவும், நேற்று காலை உணவு அருந்திவிட்டு கை கழுவுவதற் காக கிணற்றடிக்கு
.சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயி ரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.

Share.
Leave A Reply