கண்டி–கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் மலைப் பகுதியில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனேதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இந்த பாறை சரிவு காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்புக்காக சாலை ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாதை பயன்படுத்தும் சாரதிகள் தீவிர அவதானத்துடன் செயல்படவும், இயன்றவரை மாற்று சாலைகளைப் பயன்படுத்தவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply