திருநெல்வேலி துலக்கர்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் (67), 3 வயது சிறுவனை பாலியல் ரீதியாக தாக்கிய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் மானூர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புலன் விசாரணை முடிவில், போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு 7½ ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. விசாரணையை வெற்றிகரமாக முடித்த காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
Related Posts
Add A Comment

