விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா?

“வெளில இருந்து பார்க்கறத விடவும் கொடூரமா இருக்கா” – வந்த முதல் நாளில் பாரு குறித்து சாண்ட்ரா சொன்னது இது. ஆனால் இப்போது பார்த்தால் பாருவை விடவும் சாண்ட்ரா கொடூரமாக தென்படுகிறார். பாருவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்து விடுவார் போலிருக்கிறது. அத்தனை வன்மம்.

விக்ரமை பிரஜின் வெளிப்படையாக மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்களை விஜய்சேதுபதி இந்த வாரம் கறாராக விசாரிக்க வேண்டும். செய்வாரா?

“நான் யாரு.. எங்க இருக்கேன்.. ஒண்ணும் புரியலையே” என்று விக்ரமிடம் அனத்திக் கொண்டிருந்தார் அமித். “நான் இந்த ஆட்டத்திற்கு பொருத்தமானவன் இல்லன்னு தோணுது. என்ன பண்றேன். நான் செய்யறது தெரியுதா.. ஒண்ணும் வௌங்கலை” என்றெல்லாம் புலம்பிய அமித்திடம் “நீங்க உங்க ஸ்டைல்ல ஆடுங்க ப்ரோ” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.

வீக்லி டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல சமயங்களில் நியாயமாக நடந்து கொண்டாலும் வியானாவிற்குள்ளும் ஒரு சிறிய விஷ பாட்டில் இருக்கிறது.

தன்னை அழ வைத்த விக்ரமை அவர் தேர்வு செய்ய, சொல்லி முடிக்கும் வரை காத்திருந்த பிக் பாஸ் ‘விக்ரம் பெயரை சொல்ல முடியாது. அவர் தல போட்டியில் இருக்கிறார்’ என்று நிராகரித்தார். எனவே சாண்ட்ராவின் பெயரை வியானா சொன்னது சிறப்பான தோ்வு.

பிறகு வந்த பலருமே சாண்ட்ரா மற்றும் திவ்யாவின் பெயரை சொன்னார்கள். பாருவை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை.

மாப் மாயாவிஸ் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டு அந்த அணியில் உள்ள அனைவருமே தல போட்டியில் இருப்பதால் அவர்களின் பெயரைச் சொல்ல முடியாது.

இல்லையென்றால் சாம்பார் அணியில் இருந்தவர்கள் விக்ரமை டார்கெட் செய்திருப்பார்கள். பிரஜின் கூட சாண்ட்ராவின் பெயரைச் சொல்லி நியாயவான் போல காட்டிக் கொண்டார்.

இறுதியில் ‘worst performer’-களாக சாண்ட்ராவும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் சிறைக்கு செல்லும் தண்டனையோடு கூடுதலாக ஒன்றையும் தந்தார் பிக் பாஸ். ‘அடுத்த சீசன்ல கண்ணை மூடிக்கங்க’ என்று பிக் பாஸிற்கே அட்வைஸ் செய்த சாண்ட்ராவிற்கு செக்மேட்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 47

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 47|21/11/2025

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 46

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 46|20/11/2025

Share.
Leave A Reply