இலங்கையின் முன் பிள்ளை பருவக் கல்வியை ஒரே தரநிலைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட முன்பிள்ளை பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு இன்று கல்வி அமைச்சில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய கல்வி நிறுவகம் (NIE) வடிவமைத்த இந்த கட்டமைப்பு, நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பகால கல்வி மையங்களிலும் ஒரே மாதிரியான கற்றல் முறையை உருவாக்கி, சிறுவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டது. 2027ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வர உள்ள தேசிய பாலர் கல்விக் கொள்கைக்கு முன்னோட்டமாக, அடுத்த வாரம் UNICEF ஆதரவுடன் பயிற்சியாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
Related Posts
Add A Comment

